17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிரிக்கெட் வீரர்களின் நினைவாக திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் வீரர்களின் நினைவாக திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

எழுதியவர்: mohan February 10, 2020, 1:58 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த பாலாஜி, லட்சுமணன் என்ற இரு கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்த்தையடுத்து அவர்கள் நினைவாக திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் வெற்றி பெற்ற உசிலம்பட்டி பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினருக்கு முதல் பரிசாக ரூ.15,000 ரொக்கம் மற்றும் கோப்பையை திமுக மாநில செயற்குழு உறுப்பினர் சோலைரவி, ஜமின்தார் பாண்டியன் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி தலைவர் பாலமுருகன் இணைந்து வழங்கினர்.

இரண்டாம் இடம்பிடித்த தொட்டப்பநாயக்கணூர் சுமார்ட் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினருக்கு ரூ.10,000 ரொக்கம் மற்றும் கோப்பையை திமுக மதுரை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய் மற்றும் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி இணைந்து வழங்கினர்.மேலும் உசிலம்பட்டி பிபி கிரிக்கெட் கிளப் அணியினருக்கு மூன்றாவது பரிசாக ரூ.8,000 ரொக்கம் மற்றும் கோப்பையை செல்லம்பட்டி ஊராட்சி துணைச் சேர்மன் மணிகண்டன், சீனிவாசன் மற்றும் தொட்டப்பநாயக்கணூர் கிரிக்கெட் கமிட்டியினர் வழங்கி ஊக்கப்படுத்தினர்.மேலும் பயிற்சியாளராக உடற்கல்வி ஆசிரியர் தர்பார் ராஜா, திமுக கிளை செயலாளர் முத்துச்சாமி, வரதன், சிங்கம், பாஸ்கர், கருத்தப்பாண்டி, தண்டபாணி, சுரேஷ், செல்வம் மற்றும் ஊராட்சி செயலர் மகேஸ்வரன் உடன் இருந்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!