17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறநிலை துறை அமைச்சர் காக தேர் இரண்டு மணி நேரம் பாதிலேயே காத்திருந்தது

அறநிலை துறை அமைச்சர் காக தேர் இரண்டு மணி நேரம் பாதிலேயே காத்திருந்தது

எழுதியவர்: mohan February 10, 2020, 1:48 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாப்பாரப்பட்டியில் புதிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,பழைய சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், இரண்டு கோவில்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை சுவாமி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி சிறப்பாக நடைபெறுகிறது.இன்று விநாயகர் ரத உற்சவம் நடைபெற்றது.ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சியானது வரும் செவ்வாய்க்கிழமை சுப்பிரமணிய சுவாமி மகா ரதம் உற்சவத்தோடு  விழா நிறைவு பெறுகிறது.இன்று புதிய சுப்பிரமணிய சுவாமி திருக் கோவில் வினாயகர் ரதத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் பால் வளத் தலைவர் ரா அன்பழகன் கூட்டுறவுத் தலைவர் மா வேலுமணி அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ரத உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்.இதில் சேவூர் ராமசந்திரன் அவர்களுக்காக தேர் இரண்டு மணி நேரம் பாதி வழியிலேயே காத்திருந்ததால் பக்தர்கள்  வேண்டுதலில் தாமதம் ஏற்ப்பட்டது. பின்பு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வந்தபிறகு வடம் பிடித்து தேரை பக்தர்கள் இழுத்து நேத்திக்கடன் செலுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!