மதுரையில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெற்ற கால்பந்து போட்டி சுமார் 16 நிறுவனங்கள் பங்குபெற்ற போட்டியில் மதுரையை சேர்ந்த மதுரை சுந்தர் டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன ஊழியர்கள் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றனர். மதுரையில் சுமார் 16 கம்பெனிகள் பங்குபெற்ற கால்பந்து போட்டியானது மதுரை கோமதி புரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவன கம்பெனிகள் பங்கு பெற்றது. ஒவ்வொரு அணைக்கும் சுமார் 5 நிமிடம் விளையாடுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியும் விளையாடியது. இதில் அதிகப்படியாக கோல்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு மதுரையை சேர்ந்த பிரபல டயர் விற்பனை நிலையமான மதுரை சுந்தர் டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன ஊழியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர் .இதில் நான்கு மூன்று என்ற விகிதத்தில் கோல் அடித்து கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தனித்தனியே கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மோட்டார்வாகன நிறுவனங்களும் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தங்கமயில் ஜுவல்லரி சுசி குண்டாய் சுந்தர் டயர்ஸ் ஜேசி ரெசிடென்சி தங்கமயில் ஜுவல்லரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
















You must be logged in to post a comment.