நிலக்கோட்டை , அரண்மனை கோட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் 92-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இப்போது திருவிழாவை முன்னிட்டு அரண்மனை கோட்டையில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில் ஸ்ரீ முருகனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ஸ்ரீ முருகன் ராஜ அலங்காரத்தில் நகர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிலக்கோட்டை அரண்மனை கோட்டையில் தொடங்கி நிலக்கோட்டை, அணைப்பட்டி ரோடு, நால்ரோடு, சங்கரன் சிலை, மெயின் பஜார், பெரிய காளியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனைக் கோட்டை குமார் மணியம் வகையறா வினர் தலைமையில் செய்திருந்தனர். விழாவில் நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.