17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி,பருப்பு பறிமுதல்- இரு பெண்களிடம் விசாரணை..

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி,பருப்பு பறிமுதல்- இரு பெண்களிடம் விசாரணை..

எழுதியவர்: mohan February 10, 2020, 11:48 am

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக ரேஷன் அரிசிகள் அதிக அளவில் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக வருவாய் துறை மற்றும் காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அவ்வப்போது சோதனைச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு கேரள அரசு பேருந்தில் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து வட்டாட்சியர்கள் கங்கா, கண்ணன், வருவாய் ஆய்வாளர் பிரகலாதன் குழுவினர் புளியரை காவல் துறை சோதனை சாவடி வழியாக செல்லும் கேரள அரசு பேருந்துகளை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கோட்டையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்தில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதே போல் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தில் 50 கிலோ ரேசன் பருப்புகள் இருப்பதும் சோதனையில் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தில் பயணித்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!