17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெளிநாட்டில் மருத்துவ பட்ட படிப்பு ஆலோசனை மையம் ராமநாதபுரத்தில் தொடக்கம்

வெளிநாட்டில் மருத்துவ பட்ட படிப்பு ஆலோசனை மையம் ராமநாதபுரத்தில் தொடக்கம்

எழுதியவர்: mohan February 10, 2020, 11:12 am

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு கிராமப்புற மாணாக்கர்ளின் மருத்துவ படிப்பு என்பது பகல் கனவாகி வருகிறது. மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனி அல்ல. பரந்து விரிந்து உலகில் எல்லோராலும் சாத்தியமே என்கிறது நியூ இரா என்லைட்டன் மென்ட். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தேறியவர்கள், வெளிநாடுகளில் மருத்துவ பட்ட படிப்பில் சேர்ந்து பயில வழிகாட்டுவதில் முனைப்புடன் செயல்படும் இந்நிறுவனம் ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மாணவ, மாணவியரின் மருத்துவ பட்ட படிப்பு கனவை நனவாக்கும் நோக்கில் ஆலோசனை மையம் தொடங்கி உள்ளது. ஆலோசனை மையத்தை ராமநாதபுரம் வேலு மாணிக்கம் குழும மேலாண் பங்குதாரர் வேலு மனோகரன் திறந்து வைத்தார். தமிழ்நாடு மெட்ரிக்., பள்ளிகள் சங்க மாநில துணைத்தலைவர் வாசன், வழக்கறிஞர் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை தலைமை நிர்வாகி ஆர்.வாசுகி கூறுகையில், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ ஆகியவற்றின் கீழ் பதிவு பெற்ற நியூ இரா என்லைட்டன்மென்ட் நிறுவனம் 5.8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2020ல் மருத்துவ பட்டப் படிப்பில் சேர 15.94 லட்சம் பேர் பெயர் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து 1,17,502 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,600, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 600 என 3,200 பேருக்கு மட்டும் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க 2 அல்லது 3 ஆண்டுகளில் போராடி படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேறினால் மட்டுமே இடம் கிடைக்கும் நிலை உள்ளது. கால, நேரம் வீணாடிப்பதை தவிர்த்து நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் எடுத்து தேறியோர் எம்பிபிஎஸ் படிப்பு கனவை மிக, மிக குறைந்த கட்டணத்தில் வெளி நாடுகளில் படிக்க ஆலோசனை வழங்குகிறது. முதல் ஆண்டில் நன்றாக பயிலும் மாணவர்களுக்கு 5, 000 அமெரிக்க டாலர் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஆறாண்டு மருத்துவ படிப்பு ஆங்கில மொழியில் (இதர நாட்டு மொழிகள் கட்டாயமல்ல) மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. தனித்தனி விடுதி வசதி செய்து தரப்படுகிறது. இந்நிறுவனம் மூலம் கடந்த 5.8 ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளில் மருத்துவ படித்து வருகின்றனர் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!