18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உச்சிப்புளியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்..

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உச்சிப்புளியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2020, 8:41 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளியில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உச்சிப்புளி நகர் தலைவர் நவ்வர் ஷா தலைமை வகித்தார். எஸ்டிபிஐ., மாவட்ட பொது செயலாளர் பரக்கத்துல்லாஹ், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மன்சூர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் ஏ.ஜி. எம்.முகமது பஷீர் வரவேற்றார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்  எஸ்டிபிஐ., மாநில செயலாளர் அஹமது நவ்வி, மார்க்ஸிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், எஸ்டிபிஐ., பேச்சாளர் அப்துல் ஜமீல், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுராஹீம் ஆகியோர் பேசினர். ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் ஷெரீப், மாவட்ட துணை தலைவர் சோமு, மாவட்ட பொருளாளர் ரபீக், மண்டபம் ஒன்றிய தலைவர் நியாஸ் கான், விம் மாநில நிர்வாகி தௌலத் தியா, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கேம்பஸ் பிரன்ட் இந்தியா விதைகள் கலைக்குழுவினர் கோஷம் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!