17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் திருப்புல்லாணி வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் திருப்புல்லாணி வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

எழுதியவர்: mohan February 9, 2020, 4:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்புல்லாணி வீனஸ் மகாலில்  நடந்தது.வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக லதா வெள்ளி (பனையடியேந்தல்), செயலாளராக கோகிலா ராஜேந்திரன் (தாதனேந்தல்), பொருளாளராக கவிதா ராமகிருஷ்ணன் (லாந்தை), துணை தலைவராக செய்யது அபுதாஹீர் (கோரைக்கூட்டம்), துணை செயலாளராக சக்திவேல் (பனைக்குளம்), ஒருங்கிணைப்பாளராக இளையபாரதி (மேலமடை), செயற்குழு உறுப்பினர்களாக வியாகுல சந்தியாகு, தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, வள்ளி கருப்பையா, கஜேந்திரமாலா முத்துகிருஷ்ணன், முனியசாமி , கணேஷ், சரஸ்வதி பாக்யநாதன் நாகராஜன், ஆறுமுகவள்ளி வீரபாண்டி, அக்பர் ஜான் பீவி, கோபி செந்தமிழ் ராமையாஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சிகள் வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது போல் ஊராட்சி தலைவர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கான தொகையை உடனே வழங்க கடந்த காலங்களை போல் காசோலையில் ஊராட்சி தலைவர் கையெழுத்திடும் அதிகாரத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!