17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரிச் சங்க துவக்க விழா..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரிச் சங்க துவக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2020, 5:37 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரிச் சங்க துவக்க விழா இன்று (08/02/2020) காலை 11.00 மணியளவில் நடைப்பெற்றது. முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.S ஹமீது இப்ராகீம் ஆகியோர் இந்நிகழ்வை வாழ்த்தினார்கள்.

இறைவணக்கத்துடன் துவங்கிய இந்நிகழ்வில் Rtn.G.T.அருண் பாஸ்கர் ரோட்டரிச் சங்கம் இராமநாதபுரம் ராயல்ஸ் வரவேற்புரை வழங்கினார். M.அபிநயா ரோட்டரி பிரசிடன்ட், கணிதத்துறை இரண்டாமாண்டு மாணவி ரோட்டரிச் சங்க செயல்பாடுகளை எடுத்துரைத்துடன் கல்லூரி ரோட்டரி சங்க உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். சங்கத்தின் முதல் செயல்பாடாக மரம் நடுவிழாவை முன்னிட்டு Rtn.Dr.N.கார்த்திகேயன் ரோட்டரி சங்கம் இராம்நாட் ராயல்ஸ் மரக்கன்றுகளை வழங்க கணினி அறிவியல் துறைத் தலைவரும், சுற்றுச்சூழலியல் ஒருங்கிணைப்பாளருமான S.ரீனா பர்வின் ஆகியோர் பெற்றுக்கொண்டார்.

கல்லூரி முதல்வர் Dr.A.Rநாதிரா பானு கமால் அவர்கள் தலைமை வகித்தலுடன், சேவை மனப்பான்மையையும் மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்து பாராட்டுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் Rtn.PDG.Dr. சின்னத்துரை அப்துல்லா ARRFC, RID 3212,3000& 3202  முதலில் நட்புக்காக தொடங்கப்பட்ட ரோட்டரி சங்கம் நாளடைவில் சமூக சேவையை நோக்கி வளர்ந்தது குறித்தும், போலியோ நோய் ஒழிப்பில் ரோட்டரி பங்கு குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மாணவிகள் சேவை மனப்பான்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இறுதியாக கல்லூரி ரோட்டரி சங்க செயலாளர், ஆங்கிலத்துறை இரண்டாமாண்டு மாணவி B.வீரசபரீஸ்வரி நன்றியுரை வழங்கினார். நாட்டுபண்ணுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வை ரோட்டரி சங்க ஆலோசகர் தமிழ் துறைத் தலைவர் Dr.H.பாத்திமா, ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் S.விக்னேஸ்வரி சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!