18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா

வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா

எழுதியவர்: mohan February 8, 2020, 3:40 pm

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.மீனாட்சி அம்மன் திருக் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. அவ்விழாவின் 12 ஆம் நாளான இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி-சுந்தரேஸ்வரர் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பாடாகி தெப்பக்குளம் அருகில் இருக்கும் மரகதவல்லி முக்தீஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர். பிறகு அங்கிருந்து தெப்ப உற்சவம் நடைபெறும் திருக்குளத்தில் அமைந்துள்ள இடத்திற்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சகிதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!