இராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் , கொடைக்கானல் மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையம், அழகப்பா பல்கலை., ஜாஸ் கேட்டரிங் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளி 12 ஆம்
ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.ஜாஸ் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும்,மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவருமான ஆ.ரவிச்சந்திர ராமவன்னி தலைமை வகித்தார். இராமநாதபுரம் பாத்திமா டிரஸ்ட் கல்வி நிறுவனங்களின் முதல்வர் ஏ.முகமது சலாவுதீன் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் சுஜித்ரா ஆண்டறிக்கை வாசித்தார்.இராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி, ஆசிரியை பிரேமலதா உள்பட 88 பேருக்கு இராமநாதபுரம் அரசு ஐடிஐ முதல்வரும், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநருமான சை.ரமேஷ்குமார் பட்டம் வழங்கினார். இராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி பொருளியல் துறை தலைவர் க.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை பேசினார். உளவியல் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார். பட்டம் பெற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் 88 பேருக்கு பட்டம்
எழுதியவர்: mohan February 8, 2020, 1:47 pm




You must be logged in to post a comment.