17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஓசூரில் அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் CAS, NRC, NPR சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்..

ஓசூரில் அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் CAS, NRC, NPR சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2020, 7:46 pm

ஓசூரில் அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சி சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA,NRC,NPR சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஓசூர் ராம் நகரில் உள்ள அண்ணா சிலை முன் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநகர தலைவர் இம்ரான்கான் தலைமை வகித்தார்.

இந்த ஆரப்பாட்டத்தில் சிஏஏ,என்ஆர்சி,என்பிஆர் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!