17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் நலன் நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் நலன் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2020, 7:00 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் நலன் நிகழ்ச்சி இன்று (07/02/2020) காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர்Dr. A.R. நாதிரா பானு கமால்  பெண்கள் கல்வியில் சிறந்த பட்டம் வாங்குவதை விட ஒழுக்கத்துடன் இருப்பதே முக்கியம் என வாழ்த்துரை வழங்கினார்.

அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திருமதி.மங்கையகரசி, பெண்கள் நலத்துறை அலுவலர் இராமநாதபுரம் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், வரதட்சணைக் கொடுமை, பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர் திருமதி.அஜிதா, பெண்கள் நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இராமநாதபுரம் பெண்களுக்கான அரசு நலத்திட்டங்களையும், மேம்படுத்தும் முறையையும் எடுத்து உரைத்தார். திருமதி. செல்வி, பெண்கள் நலத்துறை ஆலோசகர் இராமநாதபுரம் அவர்கள் பெண்களுக்கான இலவச உதவி மையம் மற்றும் குழந்தைகள்நல மையம் 181, 1098 போன்றவற்றை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வை IQAC குழு சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!