இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.காடுகளை காப்பதன் அவசியத்தை விழிப்புணர்வாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்றைய திருமண நிகழ்வில் மணமக்கள் புகழேந்திரன்-சங்கரி அவர்களின் திருமணத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் நெகிழிக்கு மாற்றாக துணிப்பை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கமுதி ஒன்றிய பொறுப்பாளர் யோகேசுவரன், கமுதி நகர பொறுப்பாளர், யோககுமார், தன்னார்வலர் சூரியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.
திருமண நிகழ்வில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா:
எழுதியவர்: mohan February 7, 2020, 6:01 pm




You must be logged in to post a comment.