17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

எழுதியவர்: mohan February 7, 2020, 4:54 pm

05.02.2020 ந் தேதி C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் தாமோதரன்  மற்றும் அருள்கண்ணன்  ஆகிய இருவரும் கரிமேடு பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் சண்முகம் பிள்ளை 1 வது தெருவில் நின்றிருந்த TN 59 AM 6089 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் கொண்டு சென்று, தலைமை காவலர் அருள்கண்ணன் CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORK AND SYSTEMS ) இணைய தளத்தில் வாகன எண்ணை பதிவிட்டு பார்த்தார். D2- செல்லூர் குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்படி வாகனம் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.ரோந்துபணியில் துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!