18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குரல் எழுப்பும் போராட்டம்

குரல் எழுப்பும் போராட்டம்

எழுதியவர்: mohan February 7, 2020, 3:25 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தியும், NRC, NPR போன்ற சட்டங்களை எதி ர்த்தும் JNU, ஜாமியா மில்லியா, ஷாஹின் பாக் ல் போராளிகளை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் , மாபெரும் குரல் எழுப்பும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இக்குரல் எழுப்பும் கண்டனப் போராட்ட பொதுக் கூட்டத்தில் பெரியகுளம் அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், ஆலிம் பெருமக்கள், ஜமாத்தார்கள், இசுலாமிய இளைஞர்கள், காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மற்றும் தோழமை கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் கண்டன குரலை எழுப்பினார்.

இவண்.A.சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!