17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிரமத்தில் மயானத்திற்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு

உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிரமத்தில் மயானத்திற்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு

எழுதியவர்: mohan February 7, 2020, 11:24 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும் பாதையின் வழியில் மதுரை போடி இரயில் அகலப்பாதை செல்வதால் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் சீமானுத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸ்பாண்டி மற்றும் கிராம மக்கள் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யாவிடம் நல்லிவீரன்பட்டி   கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். அதனை தொடர்ந்து மனுவை பெற்ற கோட்டாட்சியர் சௌந்தர்யா இரயில்வே துறையினரிடம் பேசி பாதைக்கு வழி விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!