17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கத்தியை காட்டி மிரட்டியவா் கைது

கத்தியை காட்டி மிரட்டியவா் கைது

எழுதியவர்: mohan February 7, 2020, 11:01 am

கன்னியாகுமரி மாவட்டம்  கன்னியாகுமரி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்(26). ஆட்டோ ஓட்டுநரான இவர் சம்பவத்தன்று கோவளம் சன் செட் பாயிண்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொட்டாரத்தை சேர்ந்த அஜித் குமார்(23) என்பவர் ராஜேஷ்சை தடுத்து மது குடிக்க 500 ரூபாய் பணம் கேட்டார். ராஜேஷ் தர மறுக்கவே திடீரென கெட்டவார்த்தை பேசி கத்தியை காட்டி மிரட்டி ராஜேஷ்சிடமிருந்து 500 ரூபாயை பறித்துவிட்டு சென்று விட்டார். ராஜேஷ் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அன்பரசு  குற்றவாளி அஜித் குமாரை கைது செய்து  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!