மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விவசாயத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக நிலையூர் கண்மாய் மற்றும் தென்கால் கண்மாய் அமைந்துள்ளது.இதில் நிலையூர் கண்மாய் 22 அடி உயரமும், 375 ஏக்கர் பரப்பளவு மற்றும் சுமார் 18 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டுள்ளது. ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாயின் சுற்றளவு சுமார் 6 கிலோமீட்டர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையூர் கண்மாய் கூத்தியார்குண்டு, நிலையூர், கருவேலம்பட்டி, சொக்கநாதன்பட்டி, கப்பலூர், புதூர், புளியங்குளம், விருசங்குளம், எட்டுநாழி ஆகிய பல கிராம விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்கிறது.மதுரை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில், வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதுரை நிலையூர் கண்மாயில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள பெரிய மடையில் இருந்து கண்மாய்க்குள் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமால் இருந்து வந்தது.இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வினால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.