18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக அரபிக் தின விழாவில் பரிசுகள் வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவிகள்..

உலக அரபிக் தின விழாவில் பரிசுகள் வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் February 6, 2020, 3:06 pm

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக அரபி மொழி தினம் கடந்த பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு சென்னை நியூ கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் K.முஜிபுர்ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல் வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் இஸ்லாமியா பள்ளியில் 2ம் வகுப்பும் படிக்கும் மாணவி S.பாத்திமா சனா கட்டுரை போட்டியில் இரண்டாவது பரிசையும், 12ம் வகுப்பு படிக்கும் சாரா ஜுல்ஃபா பேச்சு போட்டியில் முதல் பரிசையும் வென்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!