18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் கடும் பணிகளுக்கு மத்தியிலும் மழலைச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோட்டாச்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

உசிலம்பட்டியில் கடும் பணிகளுக்கு மத்தியிலும் மழலைச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோட்டாச்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

எழுதியவர்: mohan February 6, 2020, 2:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப் பேட்டை தெருவிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் சௌந்தர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழாவில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் பள்ளிக் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று நடனமாடினர்.விழா இறுதியில் கோட்டாச்சியர் சௌந்தர்யா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்குழந்தைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

அலுவல் பணி காரணமாக சில குழந்தைகளுக்கு மட்டும் மேடையில் பதக்கங்கள் வழங்கியவர் பின்னர் பள்ளி அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.மற்ற குழந்தைகளுக்கு அவர்களுடைய வகுப்பறையில் பதக்கங்கள் வழங்கப்பட்டது.தம்முடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மேடையில் பதக்கம் வழங்கி விட்டு தமக்கு வகுப்பறையில் வழங்கப்படுவதைக்கண்ட அப்பள்ளியில் எல்கேஜி படிக்கும் மாணவன் லஷ்வின் தனக்கும் அந்தம்மததான் பதக்கம் வழங்க வேண்டுமென அடம் பிடித்து அழ ஆரம்பித்துள்ளான்.இது கோட்டாச்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உடனடியாக தான் அமர்ந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்த கோட்டாச்சியர் சௌந்தர்யா அவனுக்கு பதக்கம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

கடும் அலுவல் பணிகளுக்கு மத்தியிலும் தாயுள்ளத்தோடு மழலைச் சிறுவனனின் ஆசையை பூர்த்தி செய்த கோட்டாச்சியர் சௌந்தர்யாவை அனைவரும் மனதாரப் பாராட்டினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!