18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக தொழு நோய் விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக தொழு நோய் விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் February 6, 2020, 12:35 pm

உலகம் முழுவதும் தொழு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வரும் வேளையில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் பள்ளி சார்பாக தொழு நோய் விழிப்புணர்வு பேரணி இன்று (06/02/2020)  நடைபெற்றது.

இந்த பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி பல முக்கிய தெரு வழியாக கீழக்கரை நகராட்சி முன்பாக தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு கோஷங்களுடன் கடந்து சென்றது. இப்பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

அப்பேரணியின் ஒரு பகுதியாக நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகில் பள்ளி மாணவர்கள் சார்பாக தொழு நோய் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

IMG_6563

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிர்வாக குழுவினர்கள் ஊக்கமளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

சிறப்பு செய்தியாளர்:- SKV சுஹைப்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!