17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் பணம் வாங்கி ஏமாற்றியதாக கணவன் – மனைவி கைது

நிலக்கோட்டையில் பணம் வாங்கி ஏமாற்றியதாக கணவன் – மனைவி கைது

எழுதியவர்: mohan February 6, 2020, 10:14 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சி. எஸ். ஐ. தெருவைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி வசந்தா  57.இவரது மற்றொரு வீடான பெரியார் காலனியில் உள்ள வீட்டை வாடகைக்கு நிலக்கோட்டை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நித்யா (33) என்பவருக்கு வாடகைக்கு விட்டார். நித்யா குடும்பத்தார் திருப்பூர் மற்றும் வத்தலகுண்டில் கார்மெண்ட்ஸ் கடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாடகை வாங்குவதற்காக வரும்போது வசந்தாவுக்கும், நித்யாவுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது மகன் சரவணனை கார்மெண்ட்ஸ் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறி வசந்தா ரூபாய் 14 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் நித்யாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.இதன் பின்னர் நித்யா முறையாக சரவணனை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு தவறான கணக்குகளை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு அடைந்த வசந்தா நான் கொடுத்த பணம் 14 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இந்த பணத்தை திரும்ப தர நித்யா காலம் தாழ்த்தியதால் இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் வசந்தா கொடுத்த புகாரின்படி நித்யா (வயது 33). நித்யாவின் கணவர் பழனிசாமி வயது 38. பழனிச்சாமியின் தந்தை நாகுபிள்ளை வயது 65, பழனிச்சாமியின் தாயார் நாகலட்சுமி வயது 60 பழனிச்சாமியின் தம்பிகள் சுந்தரபாண்டி வயது 36, கார்த்தி வயது 32, ஆயா ஆறு பேர்கள் மீது நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யா .பழனிச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் மும்தாஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்ன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!