18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் -வீரவநல்லூரில் பரபரப்பு..!

அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் -வீரவநல்லூரில் பரபரப்பு..!

எழுதியவர்: Askar February 6, 2020, 9:14 am

 

அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் -வீரவநல்லூரில் பரபரப்பு..!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியில் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கோவில்கள் அருகே கடந்த மாதம் 27-ந் தேதி புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்த கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடைசெயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 05.02.20 நேற்று நெல்லை-பாபநாசம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலில் பெண்கள், பள்ளிக்குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இப்பகுதியில் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும் போது இப்பகுதி ஜாதி,மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாகவும்,ஏற்கனவே இரண்டு கடை இருக்கும் நிலையில் மூன்றாவதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாகவும், எனவே அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்றனர்.இந்த சாலை மறியலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!