17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பலியான நபர்களுக்கு நீதிகேட்டு ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பலியான நபர்களுக்கு நீதிகேட்டு ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

எழுதியவர்: mohan February 5, 2020, 6:27 pm

சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நடுவூர் பகுதியில் இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உடல் நசுங்கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதற்கு முழு காரணம் தீண்டாமை சுவர் தான் எனவும் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உயிரிழந்த 17 பேருக்கு நீதி கேட்கும் வகையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆதி தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உயிரிழந்த 17 பேரின் படுகொலைக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை வீரன் தமிழ் புலிகள் கட்சி பேரறிவாளன் திராவிடர் கழக மனிதன் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!