18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம். விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்..

அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம். விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்..

எழுதியவர்: mohan February 5, 2020, 4:11 pm

மதுரை பைபாஸ் சாலை எல்லிஸ் நகர் 70 அடி சாலை சந்திப்பில் இருந்து ஒரு பெண் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் காளவாசல் நோக்கி வாகனத்தை திருப்பியுள்ளார். அப்பொழுது பழங்காநத்தம் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்  சாலையில் இருந்து வந்த இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண் மீது மோதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். நிலைகுலைந்த தாயும் குழந்தையும் காயத்துடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் . இவர்கள் மதியம் 2. 30 மணியிலிருந்து சுமார் 4மணி வரை போட்டி போட்டுக்கொண்டு ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் பந்தயம் கட்டி வாகனம் ஓட்டுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக அறிவியல் பொது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!