18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தையன் கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 சவரன் தங்க நகை பறிப்பு

சித்தையன் கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 சவரன் தங்க நகை பறிப்பு

எழுதியவர்: mohan February 5, 2020, 4:04 pm

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த பெண் கழுத்தில் அனிந்திருந்த 16 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத பெண் வீடு நுழைந்து தாக்கி பறித்து சென்றுள்ளார்.முதியவர் ரஹிமா ( 70) கணவர் கமாலுதீன் ஆலிம்(80)சித்தையன் கோட்டை கிழக்கு முகமதியர் தெருவில் இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். கணவர் கமாலுதீன் ஆலிம் தாராபுரத்தில் உள்ள ஒரு அரபி பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்பொழுது ரஹீமா மட்டும் தனியாக அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

5.2.2020 புதன் கிழமை காலை 11 மணி அளவில் ரஹிமா தனது வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து இருக்கும் பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரஹிமாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற ரஹிமாவை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண் வயது முதிர்ந்த ரஹிமாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலைகுலைந்திருந்த நிலையில் கழுத்தில் அனிந்திருந்த சுமார் 16 சவரன் தங்க நகையை அந்த பெண் பறித்து சென்றுள்ளார். பட்டப்பகலில் பெண்ஒருவரிடம் செயின் அறுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் பெண் ஒருவர் மட்டும்தானா அல்லது அவருடன் சேர்ந்து வேறு நபர்களும் ஈடுபட்டுள்ளார்களா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!