18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூரில் கடந்த 40 வருடங்களாக சாக்கடை மற்றும் சாலை வசதி கேட்டு அப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர்.

பேரையூரில் கடந்த 40 வருடங்களாக சாக்கடை மற்றும் சாலை வசதி கேட்டு அப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர்.

எழுதியவர்: mohan February 5, 2020, 2:06 pm

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியின் கீழ் உள்ளது சுப்ரமணியன் கோவில் தெரு. இந்த தெருவில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சுப்ரமணியன்; கோவில் தெருவில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி நிதியின் மூலம் தெருக்களில் சிமென்ட் சாலையும், சாக்கடை வசதியும் செய்து கொடுத்தனர். ஆனால் சில வருடங்களிலேயே அந்த சாலையும், சாக்கடை வடிகாலும் சேதமடைந்து விட்டது. அதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் வீடுகள் கட்டும் போது தங்களது வீட்டின் முன்பும் உள்ள வாசலில் சிமென்ட், மணல், ஜல்லிகளை கொண்டு அவர்களே சாலை அமைத்தும், சேதமடைந்து கிடக்கும் சாக்கடை வடிகாலையும் அமைத்துள்ளனர். ஆனால் அதிகாரிகளிடம் இது குறித்து கடந்த 40 வருடஙகளாக சாக்கடை மற்றும் சாக்கடைவசதி கேட்டு மனு அளித்தும், கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடனே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் சாலைவசதியும், சாக்கடை வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!