தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். சிஏஏ.,வால் முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என ஒருவித பீதியை கிளப்பியுள்ளனர். ஆனால், இங்குள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்மபூமி என இங்கேயே வாழும் முஸ்லிம்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? சிலர் சுயலாபத்திற்காக தூண்டி விடுகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக களத்தில் இறங்கி நானே போராடுவேன்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். என்பிஆர் முக்கியம் மற்றும் அவசியம். மக்கள் தொகை பதிவேடு இருந்தால் தான் யார் வெளிநாட்டவர்கள் என்பது தெரிய வரும். என்சிஆர் இன்னும் அமல்படுத்தவில்லை; ஆராய்ந்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கும்போது, அந்த பிரச்னையை தீர ஆராய்ந்து பின்னர் போராடுங்கள். நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் என்பது வருமான வரித்துறைக்கே தெரியும். சட்ட விரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.




You must be logged in to post a comment.