17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆலோசனை கூட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan February 5, 2020, 12:13 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கருப்புச்சாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறியாளர் வெற்றிவீரன் வரவேற்று பேசினார் . கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் பயன்பெறும் பணிகள், நில வள மேம்பாட்டு பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் பணிகள் பற்றிய விரிவான ஆலோசனை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களிடம் எடுத்துக் கூறக்கூடிய விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல் பணிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம், மீன்வளத் துறை சார்பாக ஒரு ஏக்கருக்கு மீன்குஞ்சுகள் வளர்ப்பதற்கு ரூ. 75000, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழி அமைப்பதற்கு ரூ.11500-ம், தனிநபர் மற்றும் சமுதாய திறந்தவெளிக் கிணறு அமைத்தல் ரூபாய் 6 லட்சத்து 53 ஆயிரம் முதல் 10 லட்சத்து 72 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோன்று தனிநபர் தோட்டத்தில் எருக்குழி, உரக்குழி அமைத்து ரூபாய் 14 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கும், பாதுகாப்பான கால்நடை வளத்தை பெருக்கிட பசுந்தீவன பயிர் வளர்க்க அடிப்படை கட்டமைப்பு அமைப்பதற்கு ரூபாய் 15500 ம், ஆடு மாடு கோழிகளுக்கு கொட்டகை அமைத்தல் ரூபாய் 15 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெறுவதற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ஆகவே தலைவர்கள் உடனடியாக இப் பயனைப் பெற பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டுமென தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் பொதுமக்களிடம் இருந்து வீட்டு வரி வசூலிக்க படாமல் உள்ளது . இதனை தண்டோரா மூலமாகவோ,  அல்லது பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து உடனடியாக வீட்டு வரி வசூல் செய்ய வேண்டுமென்று தலைவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், வைகை பாலன், காளிதாஸ், விரு சின்னு, மாயக் காள்,நாகேந்திரன், முனி ராஜா, பாண்டி, முத்துலட்சுமி, மகேந்திரன், ஜெயபிரகாஷ், செல்வி, சுகந்தா தேவி, செல்வம், ராஜலட்சுமி, யசோதை, பவுன்தாய், தீபா, அன்பழகன், பழனியம்மாள், ஜோதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் டெல்லி நன்றி தெரிவித்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!