17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனைவி தற்கொலை. கணவன் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்தார்

மனைவி தற்கொலை. கணவன் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்தார்

எழுதியவர்: mohan February 5, 2020, 12:08 pm

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (30) இவர் பெங்களூரில் ஆண் செவிலியராக வேலை செய்கிறார் இவரது மனைவி நிர்மலா (23) குழந்தைகள் சஞ்சனா ஸ்ரீ (3) ரித்திகா ஸ்ரீ (1) கொடைக்கலில் மாமனார், மாமியார் வீட்டில் வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக நிர்மலா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் விரக்தி மற்றும் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெங்கடேசன் நேற்று இரவு தனது 2 பெண் குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே காட்பாடி நோக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு Uதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!