தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாவட்ட
அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரத்தில் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், நின்றநிலை தாண்டுதல் போன்ற தடகள போட்டிகள், இறகுப்பந்து, கைப்பந்து, சர்க்கர நாற்காலி பந்தயம், டேபிள் டென்னிஸ், கபடி போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், ஆரோக்கிய மருத்துவமனை டாக்டர் ஆர்.பரணிக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
எழுதியவர்: mohan February 5, 2020, 9:25 am




You must be logged in to post a comment.