18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு திறன் போட்டிகளிலும், நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் சாதனை.!

தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு திறன் போட்டிகளிலும், நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் சாதனை.!

எழுதியவர்: Askar February 4, 2020, 8:01 pm

தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு திறன் போட்டிகளிலும், நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் சாதனை.!

வத்தலகுண்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கியப்பேரவை சார்பாக 21ஆம் ஆண்டு விழாவினையொட்டி பல்வேறு திறன் போட்டிகள் வத்தலக்குண்டு -துரைபுஷ்பம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சு.ராகுல் பிரசாத் என்ற எட்டாம் வகுப்பு மாணவர் முதற் பரிசும், 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியில் அதே பள்ளியில் படித்து வரும் செ.ரோகிணி என்ற எட்டாம் வகுப்பு மாணவி இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்கள். அய்யன் திருவள்ளுவர் இலக்கியப்பேரவையின் சார்பில் நடைபெறும் திறன் போட்டிகளில் தொடர்ந்து பங்கு பெற்று அதிக பரிசுகள் பெற்றதன் காரணமாக நடுநிலை பள்ளிகளுக்கான பாவலேறு பெருஞ்சித்திரனார் நினைவுக்கேடயமும், நினைவுப் பரிசும் இப்பள்ளிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை பள்ளியின் சார்பாக திரு.சுந்தரபாண்டியன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். திருமதி அ.ராணி ஆசிரியை திறன் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளில் உடன் இருந்து கலந்து கொள்ளச்செய்தார். திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் , இத் திறன் போட்டிகளுக்கு பயிற்சி அளித்த திருமதி இரா. ராஜி ஆசிரியையும் தாளாளர் ஜா. சுதாகரன், தலைமை ஆசிரியர் திரு. இரா .விஜயகுமார் மற்றும் ஆசிரியப்பெருமக்களும் வெகுவாக பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!