சுரண்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடும் போராட்டம்-பொதுமக்கள் திரளாக பங்கேற்பு.!
இந்தியா முழுவதும் மத்திய பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகளும் வலுப்பெற்று வருகின்றன.
அந்த வகையில்,தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டம் சுரண்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் முன்பு தொடங்கியது.
இந்த கையெழுத்திடும் போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் நகரத் தலைவர் ஜெயபால், மாநில பேச்சாளர் பால்துரை, நாட்டாமை ராமராஜ், பொருளாளர் அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், கணேசன், சசிகுமார், வைகை கணேசன், சங்கரநாராயணன், ராஜேந்திர செல்வன், ஜெயராஜ், கோமதிநாயகம், சபரி நிஷா, கார்த்திக், சுதன் ராஜா, ஷேக் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபாலன் குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து திரளான பொதுமக்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் ஞானசீலன், பெயரிட்டனர், டெய்லர் முருகன், சங்கரேஸ்வரன், அரவிந்த், தங்கவேலு, மாரியப்பன், ஐயப்பன், பண்டாரம், சீனிவாசன், சந்திரன், வீனஸ் முருகேஷ், பவுன், தங்கவேலு, செல்லத்துரை, முருகன், சண்முகசுந்தரம், தங்கம், பட்டுமுத்து, மீரான், சமூக ஆர்வலர் ஆறுமுகம், காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன், அருணாசலகனி, செல்வன், தெய்வேந்திரன், சுப்பையா, செல்வராஜ், சமுத்திரம், ஆறுமுகம், காந்தையா, கணேசன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.