18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்-மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.!

தென்காசியில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்-மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.!

எழுதியவர்: Askar February 4, 2020, 8:45 am

தென்காசியில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்-மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.!

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் 03.02.2020 திங்கள் கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூபாய் 1000 , மாதந்திர உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

இரண்டு பயனாளிகளுக்கு எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், வெளிநாட்டில் ( சவுதி அரேபியாவில்) பணியின் போது திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட மைப்பாறை கிராமத்தை சேர்ந்த திரு.முருகன் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி திருமதி மாரியம்மாள் என்பவருக்கு விபத்து நிவாரண தொகை ரூபாய் 1,61,885 கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார். கூட்டத்தில் 1271 மனுக்கள் பெறப்பட்டது.மேலும் குற்றாலம் கோவில் தேவஸ்தானம் கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையின் உரிய நடவடிக்கை இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!