டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக இன்று ஆர்ப்பாட்டம்:-உதயநி ஸ்டாலின் பங்கேற்பு.!
எழுதியவர்: Askar February 4, 2020, 8:33 am

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக இன்று ஆர்ப்பாட்டம்:-உதயநி ஸ்டாலின் பங்கேற்பு.! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2-ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் தினமும் புதுபுது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ போலீசாரின் விசாரணைக்கு மாற்றக்கோரியும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்யக்கோரியும் இன்று காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஏழை எளிய மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தமிழக அரசையும் ஒருமித்த குரலில் கண்டிப்போம் என திமுக வலியுறுத்த உள்ளது.



You must be logged in to post a comment.