18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாவட்ட அளவிளான வில் வித்தை போட்டியில் பரிசுகளை குவித்த அல் பையினா மற்றும் இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்..

மாவட்ட அளவிளான வில் வித்தை போட்டியில் பரிசுகளை குவித்த அல் பையினா மற்றும் இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2020, 7:55 pm

இராமநாதபுரம் சேதுபதி விளையாட்னரங்கில் மாவட்ட அளவிளான வில்வித்தை போட்டி மெனு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. வில்வித்தை சங்கத்தின் தலைவர் ராஜிவ் அம்பு எய்து போட்டியை துவங்கி வைத்தார்.

இதில் கீழக்கரை அல்பையினா பள்ளி சார்பாக 43 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 8வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் அனைத்து பரிசுகளையும் வென்றுள்ளனர். இதில்  முதல் பரிசு:- காமிலா ரிஃபா (G3 B), இரண்டாம் பரிசு:- ஆயிஷா மென்னா (G3 A) , முகம்மது மதீன் ( G3 B), மூன்றாம் பரிசு:- நிஸ்மா (G3 B) நான்காம் பரிசு:- லுப்நா (G5) ஆகியோர் பெற்றனர்.  இப்போட்டியில்  வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரய பெருமக்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்பட்டன 8வயதுக்கு உட்பட்ட பிரிவில் அனைத்து பரிசையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதே போல் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் திவாகர் 10வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் முதல் பரிசும், பாத்திமா அமானா 10வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில்மூன்றாவது பரிசு பெற்றனர், வெற்றி பெற்ற மாணவர்களை இஸ்லாமியா பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் பாராட்டினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!