18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 போ் கைது.

ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 போ் கைது.

எழுதியவர்: mohan February 3, 2020, 5:15 pm

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). ஆட்டோ ஓட்டுநரான  வடலிவிளை பகுதியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுதாகர்(35) மற்றும் புவனேஷ்(23) இருவரும் சேர்ந்து சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி கெட்டவார்த்தை பேசி, ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். உடனே சுரேஷ்குமார் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவணகுமார் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்து  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!