17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனைக்கூட்டம்-தமிழக மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், அருண் கோத்தபயா பங்கேற்பு.!

காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனைக்கூட்டம்-தமிழக மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், அருண் கோத்தபயா பங்கேற்பு.!

எழுதியவர்: Askar February 3, 2020, 10:03 am

காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனைக்கூட்டம்- தமிழக மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், அருண் கோத்தபயா பங்கேற்பு.!

தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பழனி நாடார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் அருண் கோத்தபயா கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, மக்களிடம் ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவது, அதனை ஓட்டுக்களாக மாற்றுவது கிராமப்புறங்களில் கமிட்டியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொண்டர்களிடையே சஞ்சய் தத் பேசுகையில், மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுக மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். அதை சரியாக பயன்படுத்தி வருகின்ற காலங்களில் நாம் காங்கிரஸின் வெற்றியாக மாற்ற வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள் யாவும் இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் உள்ளது. தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் காங்கிரஸின் கருத்துக்களை பரவலாக ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆகவே பாரதிய ஜனதா கட்சியை முறியடிக்க தகுந்த ஆலோசனையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ரூபி மனோகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன் ஆலங்குளம் செல்வராஜ் ராம்மோகன் மாடசாமி ஜோதிடர், செங்கோட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சட்டநாதன், செங்கோட்டை வட்டார தலைவர் அந்தோணி வியாகப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜேம்ஸ், மாவட்ட மகளிரணி தலைவி நாகம்மாள், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன் உள்ளிட்ட மாவட்ட நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!