17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வாலிபர்கள்- நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார்.!

மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வாலிபர்கள்- நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார்.!

எழுதியவர்: Askar February 3, 2020, 9:30 am

மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வாலிபர்கள்- நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார்.!

இளம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு, 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின் றனர். இந்நிலையில், வெள்ளியன்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாணவிகளை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் சிலர் பள்ளி நுழைவு வாயில் முன்பு இடையூறு செய்துள்ளனர். இதனை கண்ட பெற்றோர்கள் அந்த வாலிபர்களை பிடித்தனர். இதனையடுத்து, மகுடஞ்சாவடி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அந்த வாலிபர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் வந்த காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன்பின்னர் பெற்றோர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையம் சென்று புகார் செய்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வரும் பொழுதும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் சில வாலிபர்கள் இடையூறு செய்து வருகின்றனர். இதனால், எங்கள் குழந்தைகள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்மநபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பெண் குழந்தைகள் படிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளி நுழைவாயிலில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தி காலை மற்றும் மாலை நேரங்க ளில் காவலர்கள் ரோந்து பணிகளை மேற் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்ட னர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!