17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டில்லி ஜேஎன்யு மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்

டில்லி ஜேஎன்யு மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan February 1, 2020, 5:47 pm

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து எஸ்டிபிஐ., கட்சி சார்பில் இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சோமு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுல்தான் வரவேற்றார்.மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் ஷெரீப் (புதுமடம்), நூருல் ஜமால், ரினோஜ், மாநில பேச்சாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் பேசினர். நகர் பொருளாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.குடியுரிமை திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் உள்ளிட்ட சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், டில்லி ஜவஹர்லால் பல்கலை., மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!