உசிலம்பட்டியில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு செய்து வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் யில் தண்ணீர் திறந்து விட்டதிற்கு நன்றி தெரிவித்தனர். மதுரையில் இருந்து தேனி செல்லும்
வழியில் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே வந்தபோது தமிழகத் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை 58 கிராம கால்வாய் சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் பெருமாள் மற்றும் பொருளாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், ஜான்சன் முனியாண்டி ,அஜித் பாண்டி, நேதாஜி, ஆதிசேடன், வழக்கறிஞர் சொக்கநாதன் மற்றும் நிர்வாகிகள் 58 கிராம கால்வாய் திட்டத்தில் வைகை அணையில் தண்ணீரை திறந்து விட்டதற்கு நன்றி தெரிவித்து வரவேற்றனர், துணை முதல்வர் ஓ, பன்னீர்செல்வம் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து 58 கால்வாய் சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டார், இவ்விழாவில் அதிமுக நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் வழக்கறிஞர் லட்சுமணன் சசிகுமார் ஆண்டி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவேற்றனர்.
உசிலம்பட்டியில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு
எழுதியவர்: mohan February 1, 2020, 5:43 pm




You must be logged in to post a comment.