17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் சில்லறை வியாபாரிகள்.

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் சில்லறை வியாபாரிகள்.

எழுதியவர்: mohan February 1, 2020, 4:33 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தினந்தோரும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து பெங்களூர் ஓசூர் மாரண்டஅள்ளி காரிமங்கலம் கிருஷ்ணகிரி. இதுபோன்ற வெளி ஊர்களுக்கு பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.  பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இடத்தில் சில்லரை கடை வியாபாரிகள் பேருந்து சுற்றியும் தரையில் அமர்ந்து கடை வைத்துள்ளனர்.  பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகிகள் சில்லரை வியாபாரிகளிடம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு சில்லரை கடை வியாபாரிகளே கண்டுகொள்வதில்லை. பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க கூட இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இப் பேருந்து நிலையத்தில் காய் கடை.  பிளாஸ்டிக் பொருட்கள் கடை. தள்ளுவண்டி கடை  வைத்து பேருந்து நிலையம் சில்லறை வியாபாரிகளின் ராஜியமாகயுள்ளது.   பேருந்து வந்து நின்ற பிறகு பேருந்தில் ஏறுவதுக்கு  பொதுமக்கள் ஒருவர்மீது ஒருவர் இடித்துக்கொண்டு பேருந்தில் ஏறுவதால்  செல்போன் பாக்கெட் பருசு  திருட்டு போய்விடுகிறது. இதனால் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சில்லறை கடைகளை அகற்றி பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும்  வரை அவர்கள் அமர்வதற்கு காங்கிரட் அல்லது இரும்பு நாற்காலி பயணிகளுக்கு அமைத்து தரவேண்டும். பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் பயணிகளின் நலனுக்காக பேருந்து நிலையத்தில் இருக்கும் சிறு வியாபாரி கடைகளை ஒரு  புறமாக அமைக்க  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலக்கோடு பேருந்து நிலையத்தில்  பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின்  கோரிக்கை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!