17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு சிறை

மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு சிறை

எழுதியவர்: mohan February 1, 2020, 4:16 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கையை சேர்ந்தவர் விக்னேஷ்(24) .கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2017ம் ஆண்டு ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஒரு மாணவியிடம் பழகி ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி தவறாக நடந்துவிட்டார். இது பற்றி அந்த மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கானது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி விக்னேஷுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!