17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி மூன்று மாவட்டங்களாக பிரிப்பு: எம் எல் ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளராக அறிவிப்பு.!

திருச்சி மூன்று மாவட்டங்களாக பிரிப்பு: எம் எல் ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளராக அறிவிப்பு.!

எழுதியவர்: Askar February 1, 2020, 3:46 pm

இது தொடர்பாக க.அன்பழகன் இன்று (பிப்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மத்திய மாவட்டக் கழகச் செயலாளராக வைரமணியும், திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!