17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்ச வழக்கில் கிராமநிா்வாகஅலுவலா்க்கு சிறை

இலஞ்ச வழக்கில் கிராமநிா்வாகஅலுவலா்க்கு சிறை

எழுதியவர்: mohan February 1, 2020, 10:24 am

கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி .இவர் தனது நிலத்தில் இருந்த பாறையை உடைக்க அனுமதி கோரி கிராம நிர்வாக அதிகாரியிடம் பரிந்துரை கடிதம் வாங்க தனது அண்ணன் காலின்ஸ் என்பவரை கிராம நிர்வாக அதிகாரியிடம் அனுப்பி வைத்தார். அப்போது அங்கு இருந்த கிராம நிர்வாக அதிகாரி சந்திரா ரூபாய் 20000/- லஞ்சம் கேட்டுள்ளார் . முதற்கட்டமாக 2000/- வழங்குமாறும் பரிந்துரை கடிதம் தந்த பிறகு மீதி பணத்தை தருமாறும் கேட்டுள்ளார். இதுகுறித்து காலின்ஸ் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அவர்களது அறிவுரையின் படி 08.11.2006 அன்று ரூபாய் 2000/- த்தை காலின்ஸ் அவர்கள் வி. ஓ. ஏ சந்திரா அவர்களிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திராவை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திரு.அருணாச்சலம் அவர்கள் சந்திராவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 20000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!