17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டப்பணி

மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டப்பணி

எழுதியவர்: mohan February 1, 2020, 10:09 am

மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் 24 மணிநேர பணிச்சுமையின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே காவலர்களின் மனநலன் மற்றும் குடும்பநலன் கருதி “ஆனந்தம்” எனும் திட்டத்தின் மூலமாக நேற்று மதுரை மாநகர் ஆயுதப்படையில் உள்ள காவலர் குடும்பத்தினருக்கு உடல்நல மேம்பாடு, மனநல மேம்பாடு, சுற்றுப்புற தூய்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு)  கார்த்திக்., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) பாஸ்கரன், உதவி ஆணையர் .லில்லி கிரேஸ் மார்டின் (Nodal Officer Anandam) Dr. C. R. Ramasubramanian, (State Nodal Officer TN PWB), மற்றும் சமூக அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராஜா ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!