17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகாம் சென்று திரும்பிய ராமேஸ்வரம் கோயில் யானைக்கு வரவேற்பு

முகாம் சென்று திரும்பிய ராமேஸ்வரம் கோயில் யானைக்கு வரவேற்பு

எழுதியவர்: mohan February 1, 2020, 10:01 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கப்பட்டியில் 2019 டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாம், 2020 நேற்று (ஜன.31) நிறைவடைந்தது. இதில் 3,680 கிலோ எடையுடன் பங்கேற்ற ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் நடை பயிற்சிக்குப் பின்முகாம் நிறைவில் 370 கிலோ எடை அதிகரித்து 4,050 கிலோ எடையுடன் இன்று அதிகாலை திரும்பியது. குதூகலத்துடன் திரும்பிய ராமலட்சுமிக்கு, ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் ஸ்ரீதர் தலைமையில் சிறப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா, பேஷ்கர்கள் செல்வம், அண்ணாதுரை, பாகன் ராமு, பொறுப்பாளர் முனியசாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!