18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் தமிழ் கலாச்சாரமிக்க கலைநிகழ்ச்சிகளுடன் 76வது ஆண்டு விழா

உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் தமிழ் கலாச்சாரமிக்க கலைநிகழ்ச்சிகளுடன் 76வது ஆண்டு விழா

எழுதியவர்: mohan January 31, 2020, 6:45 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள ஆர்சி சிறுமலர் துவக்கப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் 76வது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி வட்டார கல்வி அதிகாரி ஆரோக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் கலாச்சாரங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக தெம்மாங்கு பாட்டு, சிலம்பம் உள்ளிட்ட கிராமிய நடனநிகழ்ச்சியுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இது காண்போர் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.இதில் ரோட்டரி சங்க துணநிலை ஆளுநர் ராஜேந்திரன், பள்ளி தாளாளர் அருட்சகோதரி லூசி, தலைமையாசிரியர் அருட்சகோதரி புனிதா, ஆர்சி சிறுமலர் சபைதலைவர் ஜெயஜோசப் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அருட்சகோதரி லூசி பரிசுகள் வழங்கினார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!