17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை நீர்

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை நீர்

எழுதியவர்: mohan January 31, 2020, 5:17 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் ரோடு வானமாமலை நகர் ஆர் கே பஜாஜ் நிறுவனம் அருகே பாதாள சாக்கடை நீர் கடந்த 3 நாட்களாக சாலையில் வளைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை பலமுறை அதிகாரியிடம் சொல்லியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இதனால் துர்நாற்றம் வீசுகிறது நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மேலும் அருகே மருத்துவமனையும் கோயிலும் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!